17A திட்டத்தின் கீழ், ஐஎன்எஸ் உதயகிரி என்ற ரேடாருக்குப் புலப்படாத போர்க் கப்பலானது ஜூலை 01 ஆம் தேதியன்று இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப் பட்டது.
இது மும்பையில் உள்ள மேசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் இந்தத் தொடரின் கீழ் கட்டமைக்கப்பட்ட இரண்டாவது கப்பல் ஆகும்.
இந்தக் கப்பல்கள் பழைய சிவாலிக் ரக (திட்டம் 17) போர்க் கப்பல்களின் மேம்பட்ட வடிவமாகும்.
இதில் மீயொலி எறிகணைகள், நடுத்தரத் தூரத் தாக்குதல் திறன் உடைய வான்வழிப் பாதுகாப்பு மற்றும் விரைந்து செயல்படும் துப்பாக்கி அமைப்புகள் போன்ற நவீன ஆயுதங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.