இந்தியக் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் கஞ்சர் ஒடிசாவிலுள்ள கோபாலபுரத்தில் அமைந்த பழமை வாய்ந்த கடற்கரைத் துறைமுகத்திற்கு வருகை புரிந்த முதல் இந்தியக் கடற்படைக் கப்பலாகும்.
அசாதி கா அம்ரித் மகோத்சவ் மற்றும் சுவர்ணிம் விஜய் வர்ஷ் ஆகிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த இரண்டு நாட்கள் அளவிலான வருகையானது ஏற்பாடு செய்யப் பட்டது.
இது 75வது சுதந்திர தினம் மற்றும் 1971 ஆம் ஆண்டு போரின் 50 ஆம் ஆண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.