ஐஎன்எஸ் கரன்ஜ் ஆனது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியக் கடற்படையிடம் வழங்கப்பட இருக்கின்றது.
ஐஎன்எஸ் கரன்ஜ் ஆனது திட்டம் - 75ஐ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது இந்தியக் கடற் படைக்கான ஆறு கல்வாரி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களின் முதலாவது தொகுப்பின் மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலாகும்.
இந்த நீர்மூழ்கிக் கப்பலானது பிரெஞ்சுக் கடற்படைப் பாதுகாப்பு நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, மும்பையில் உள்ள இந்தியக் கப்பல் கட்டும் நிறுவனமான மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.