TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் கோமதி கப்பல் கடற்படையிலிருந்து ஓய்வு

June 2 , 2022 1160 days 556 0
  • இந்தியக் கடற்படையானது, 34 ஆண்டுகாலச் சேவைக்குப் பிறகு ஐஎன்எஸ் கோமதி கப்பலை கடற்படையிலிருந்து ஓய்வு பெறச் செய்துள்ளது.
  • இந்தப் போர்க்கப்பல் ஆனது 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதியன்று படையில் இணைக்கப்பட்டது.
  • இந்தக் கப்பல் கோதாவரி ரக வழிகாட்டு ஏவுகணை எதிர்ப்புக் கப்பல்களின் வரிசையில் உருவாக்கப்பட்ட மூன்றாவது கப்பலும், மேற்கத்தியக் கடற்படையின் ஒரு பழமையான போர்க் கப்பலும் ஆகும்.
  • ஐஎன்எஸ் கோமதி கப்பலுக்கு கோமதி நதியின் நினைவாக இப்பெயரிடப்பட்டது.
  • இது கேக்டஸ் நடவடிக்கை, பராக்ரம் நடவடிக்கை மற்றும் இந்திரதனுஷ் உட்பட பல நடவடிக்கைகளிலும், மேலும் பல இருதரப்பு மற்றும் பன்னாட்டுக் கடற்படைப் பயிற்சிகளிலும் பங்கேற்றுள்ளது.
  • ஐஎன்எஸ் கோமதி கப்பலுக்கு 2007-08 ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2019-20 ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு முறையும் என இரண்டு முறை மதிப்புமிக்க யூனிட் சிட்டேஷன் என்ற விருதானது வழங்கப்பட்டது.
  • ஐஎன்எஸ் கோமதி கப்பலானது, லக்னோவில் உள்ள கோமதி ஆற்றின் அழகிய நதிக் கரையில் உள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்