- கூட்டு நீர்ப்பரப்புக் கணக்கெடுப்பை மேற்கொள்ள இந்திய கடற்படைக் கப்பல் (ஐ.என்.எஸ்) ஜமுனா ஆனது இலங்கையின் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
- நீர்ப்பரப்புக் கணக்கெடுப்பு என்பது கடற்பயணத்தைப் பாதிக்கும் அம்சங்களின் அளவீடு மற்றும் ஆய்வு பற்றியதாகும்.
- இது கடல் எண்ணெய் ஆய்வு, அகழ்வாராய்ச்சி, எண்ணெய் துளையிடுதல் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது.
- இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான தரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆகியவற்றை சர்வதேச நீர்ப்பரப்பு அமைப்பு (International Hydrographic Organization - IHO) வெளியிடுகின்றது.
- இந்த அமைப்பானது 1921 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- இந்தியாவும் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளது.
இந்திய கடற்படை நீர்ப்பரப்புத் துறை
- இதன் அலுவலகம் டேராடூனில் அமைந்துள்ளது.
- தற்போது 8 இந்திய கடற்படைக் கப்பல்கள் நீர்ப்பரப்பு ஆய்வில் ஈடுபட்டுள்ளன.
- இதில் ஐ.என்.எஸ் நிருபக், ஐ.என்.எஸ் ஜமுனா, ஐ.என்.எஸ் இன்வெஸ்டிகேட்டர், ஐ.என்.எஸ் சட்லெஜ், ஐ.என்.எஸ் சந்தாயக், ஐ.என்.எஸ் தர்ஷக், ஐ.என்.எஸ் சர்வேக்ஷக் ஆகியவை உள்ளன.