இந்தியக் கடற்படைக்காக உருவாக்கப்படும் நான்கு ஆய்வுக் கப்பல்களுள் (பெரிய) இரண்டாவதாக உருவாக்கப்பட்டுள்ள கப்பலான நிர்தேசக், சென்னையிலுள்ள காட்டுப் பள்ளியில் படையில் இணைக்கப்பட்டது.
இந்தக் கப்பலுக்கு நிர்தேசக் எனும் பழைய கப்பல் ஒன்றின் நினைவாக அதே பெயர் இடப் பட்டது.
இது ஓர் இந்தியக் கடற்படை ஆய்வுக் கப்பலாகும்.
32 ஆண்டுகால மகத்தான சேவைக்குப் பிறகு 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிர்தேசக் படையிலிருந்து நீக்கப்பட்டது.