இந்தியக் கடற்படைக் கப்பலான (ஐஎன்எஸ்) வல்சுராவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் மதிப்புமிக்க குடியரசுத் தலைவரின் வண்ணம் என்ற ஒரு விருதானது வழங்கப் பட்டது.
இது இந்தியாவின் ராணுவப் பிரிவுகளுக்கு வழங்க கூடிய மிக உயர்ந்த விருது அல்லது கௌரவமாகும்.
இந்த விருது "நிஷான்" என்றும் அழைக்கப்படுகிறது.
போர் மற்றும் அமைதி நடவடிக்கை ஆகிய இரு சமயங்களிலும் நாட்டிற்கு ஆற்றிய சிறப்பானச் சேவையை அங்கீகரிப்பதன் அடையாளமாக ராணுவப் பிரிவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.