TNPSC Thervupettagam

ஐ.என்.எஸ். விக்ராந்த்

August 7 , 2021 1463 days 651 0
  • இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் தனது முதலாவது கடல்பயணச் சோதனையை மேற்கொண்டது.
  • இந்தியாவினுள்ளேயே இராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்வதனை இது ஊக்குவிக்கிறது.
  • இது 2022 ஆம் ஆண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு உட்படுத்தப்படும்.
  • கடற்படையானது இக்கப்பலைப் படையில் இணைத்து அதன் பின்பு விமானச் சோதனைகளை மேற்கொள்ள உள்ளது.
  • விமானச் சோதனையின் போது ரஷ்ய நாட்டுத் தயாரிப்பான MiG 29K  போர் விமானங்களின் ஏற்ற இறக்கச் சோதனைகள் மேற்கொள்ளப் படும்.
  • ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலானது 44000 டன் எடை கொண்ட விமானந் தாங்கிக் கப்பலாகும்.
  • இது கேரளாவின் கொச்சியில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்