TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் விராட் குஜராத்தில் உடைக்கப் படுதல்

August 30 , 2020 1707 days 609 0
  • 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியக் கடற்படையில் பணியாற்றிய ஐஎன்எஸ் விராத் என்ற கப்பலானது குஜராத்தில் உள்ள அலாங்கில் உடைக்கப்பட உள்ளது.
  • இந்தக் கப்பலானது முன்று வருடங்களுக்கு முன்பு பணியிலிருந்து நீக்கப்பட்டது.
  • இது 1987 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
  • இதற்கு முன்பு 1959 முதல் 1984 வரை இந்தக் கப்பல் இங்கிலாந்துக் கடற்படையில் எச்எம்எஸ் ஹெர்மிஸ் என்ற பெயரில் பணியாற்றியது.
  • இது விண்மீன் குழு என்ற பெயரிலான வகுப்பைச் சேர்ந்த ஒரு விமானம் தாங்கி வகைக் கப்பலாகும்.
  • இது 2013 ஆம் ஆண்டில் பணியில் சேர்க்கப்பட்ட ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவிற்கு முன்பு இந்தியக் கடற்படையின் தலைமைக் கப்பலாக விளங்கியது.
  • தற்பொழுது, இந்தியக் கடற்படையின் ஒரே விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்