இந்தியக் கடற்படையானது “ஐஎன்எஸ் வேலா” என்ற 4-வது புலப்படாத ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மும்பையில் உள்ள மசகான் டாக் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
எம்எஸ் கடற்படைக் குழுமமானது பிரான்சைச் சேர்ந்த இதன் கூட்டாளி நிறுவனமாகும்.
1973 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படைப் பணியில் இணைக்கப்பட்ட சோவியத்தைச் சேர்ந்த “ஐஎன்எஸ் வேலா” என்ற நீர்மூழ்கிக் கப்பலின் பெயரையடுத்து இந்தக் கப்பலுக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் வேலா என்ற நீர்மூழ்கிக் கப்பலானது “திட்டம்-75” என்பதின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்பீன் வகை என்பது கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்தியக் கடற்படையின் முதலாவது நவீன மரபு சார்ந்த டீசல்-மின் நீர்மூழ்கிக் கப்பலின் வரிசையாகும்.