TNPSC Thervupettagam

ஐ.ஏ.எஸ். & ஐ.பி.எஸ். அதிகாரிகள் அயல்நாட்டு உயரதிகாரிகளின் பரிசுகள்

September 24 , 2021 1415 days 497 0
  • தற்போதுள்ள விதிகளின்படி, இந்த அதிகாரிகளுக்கு திருமணங்கள், இறுதிச் சடங்குகள், ஆண்டு விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகள் போன்ற சமயங்களில் அவர்களது நெருங்கிய உறவினர்களிடமிருந்தோ  அல்லது அவர்களுடன் உத்தியோகப்பூர்வ தொடர்பில் இல்லாத தனிப்பட்ட நண்பர்களிடமிருந்தோ பரிசுகளைப் பெற அனுமதிக்கப் பட்டது.
  • இருப்பினும் அத்தகையப் பரிசின் மதிப்பு 25,000 ரூபாய்க்கும் மேலாக இருந்தால் அது குறித்து அவர்கள் அரசிடம் அறிக்கை அளிக்க வேண்டும்.

திருத்தப்பட்ட விதி

  • 1968 ஆம் ஆண்டு அகில இந்தியப் பணி (நடத்தை) விதிகளில் ஒரு புதிய உட்பிரிவு சேர்க்கப் பட்டுள்ளது.
  • இதன்படி, 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பங்களிப்புகள் (பரிசுகளை ஏற்றுக் கொள்தல் (அ) தக்க வைத்துக் கொள்தல்) விதிகளின் விதிமுறைகளுக்கு இணங்க அயல்நாட்டு உயரதிகாரிகளால் வழங்கப்படும் பரிசுகளை ஓர் உறுப்பினர் பெற்றுக் கொண்டு அதனை அவர்களே வைத்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்