ஐஐஐடி (Indian Institutes of Information Technology - IIIT) சட்டங்கள் திருத்த மசோதா, 2020
September 26 , 2020 1789 days 749 0
2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று இந்திய நாடாளுமன்றமானது இந்தியத் தகவல் தொழில்நுட்ப மையங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2020 என்ற மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இந்தத் திருத்தமானது 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளின் முதன்மைச் சட்டங்களைத் திருத்த உள்ளது.
இது பொது-தனியார் பங்களிப்பின் மூலம் இயங்கும் ஐஐஐடி போபால், ஐஐஐடி அகர்தலா, ஐஐஐடி சூரத், ஐஐஐடி பாகல்பூர் மற்றும் ஐஐஐடி ராய்ச்சூர் என்ற 5 கல்வி நிறுவனங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அறிவிக்கக் கோருகின்றது.
இந்த கல்வி நிறுவனங்கள் ஏற்கெனவே சமுதாயப் பதிவுகள், சட்டம் 1860 என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்களாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
இதன் மூலம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த களவில் நிறுவனங்களாக அறிவிக்கப் பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையானது 25 ஆக உயர இருக்கின்றது.