ஐஐடி மெட்ராஸ்- தமிழ்நாடு மின் நிர்வாக அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
October 18 , 2018 2409 days 859 0
தகவல்களால் இயக்கப்படும் நிர்வாகத்தை செம்மைப்படுத்த மெட்ராஸ் ஐஐடி ஆனது தமிழ்நாடு மின் ஆளுகை அமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம், மெட்ராஸ் ஐஐடியில் உள்ள தகவல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவிற்கான ராபர்ட் பாஸ்க் மையம் (RBC DSAI -Robert Bosch Centre for Data Science and Artificial Intelligence) தகவல் அறிவியல் மற்றும் தகவல் தொலைத் தொடர்பு சம்பந்தமான பலதரப்பட்ட சவால்களை தீர்ப்பதற்கு தமிழக அரசிற்கு ஒத்துழைப்பு அளிக்க ஒத்துக் கொண்டிருக்கின்றது.
தமிழ்நாடு மின் ஆளுகை நிறுவனமானது (Tamil Nadu e-Governance Agency-TNeGA) மாநில அரசின் அனைத்து மின் நிர்வாக முயற்சிகளையும் மேம்படுத்தி செயல்படுத்திட மாநில தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் மாநில செயல்பாட்டு நிறுவனமாகும்.
RBC DSAI என்பது செயற்கை நுண்ணறிவில் செயல்படும் பல்துறை ஆராய்ச்சி மையம் ஆகும்.