இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்தின் சர்வதேச பணவழங்கீட்டு நிறுவனமானது, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும், BHIMஎனும் பண வழங்கீட்டு இடைமுக அமைப்பு NEOPAY முனையங்களில் நேரடியாக கிடைக்கப் பெறும் என்று அறிவித்துள்ளது.
இந்த முன்னெடுப்பானது, ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்லும் மில்லியன் கணக்கான இந்தியர்கள் வசதியான மற்றும் பாதுகாப்பான முறைகளில் பணம் செலுத்துவதற்கான ஒரு வசதியை அளிக்கும்.
NEOPAY வசதி பெற்ற வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் என அனைத்திலும் BHIM UPI அமைப்பைப் பயன்படுத்திப் பணம் செலுத்தலாம்.
NEOPAY என்பது மஷ்ரெக் வங்கியின் ஒரு பணவழங்கீட்டுத் துணை நிறுவனம் ஆகும்.
அந்த நாட்டில் UPI வசதியை ஏற்றுக் கொள்ளும் உள்கட்டமைப்பை உருவாக்க இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகத்தின் சர்வதேசப் பணவழங்கீட்டு நிறுவனமானது 2021 ஆம் ஆண்டில் NEOPAY உடன் கை கோர்த்தது.