ஐக்கிய இராஜ்ஜிய நாடுகளின் கோஸ்டா குழந்தைகள் விருது - 2019
January 15 , 2020 2127 days 762 0
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து எழுத்தாளரான ஜஸ்பிந்தர் பிலன் என்பவர் 2019 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய இராஜ்ஜிய நாடுகளின் குழந்தைகள் புத்தக விருதான “கோஸ்டா குழந்தைகள் விருதை” பெற்றுள்ளார்.
இந்த விருதானது 9 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வரம்பில் உள்ள வாசகர்களை மையமாகக் கொண்ட அவரது முதலாவது நாவலான ‘ஆஷா அண்ட் தி ஸ்பிரிட் பேர்ட்’ (Asha and the Spirit Bird) என்னும் நாவலுக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதானது ஆண்டுதோறும் “முதலாவது நாவல், நாவல், சுயசரிதை, கவிதை மற்றும் குழந்தைகள் புத்தகம்” என்ற 5 பிரிவுகளில் வழங்கப் படுகின்றது.