ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான தலைமைப் பதவி - முதல் பெண்மணி
April 3 , 2018 2773 days 931 0
உலக அமைப்புகளில் உயர்ந்தபட்ச செல்வாக்கு கொண்ட பதவிகளில் ஒன்றான ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான தலைமைப் பதவியில் முதல் பெண்மணியாக நியமிக்கப்பட அமெரிக்காவின் நீண்டநாள் வெளிநாட்டுத் தூதரான ரோஸ்மேரி டி கார்லோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஏற்படும் சச்சரவுகளைத் தீர்க்க பாடுபடும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான சபையில் கீழ் மட்டச் செயலாளராக 2012ம் ஆண்டில் இருந்து பதவி வகிக்கும் மற்றொரு அமெரிக்கரான ஜெப்ரி பெல்ட்மேன் என்பவரைத் தொடர்ந்து டி கார்லோ இந்தப் பதவியில் அமர உள்ளார்.
இந்த நியமனம் உலக அமைப்புகளின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்மணி தலைமைப் பதவிக்கு நியமிக்கப்படுவதைக் குறிக்கின்றது.