ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் எல்லைகள் அறிக்கை
February 22 , 2022 1366 days 628 0
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது எல்லைகள் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
“இரைச்சல், தீப்பிழம்பு மற்றும் பொருத்தமின்மை : சுற்றுச்சூழலில் அதிகரித்து வரும் பிரச்சினைகள்“ (Noise, Blazes, and Mismatches: Emerging Issues of Environmental Concern) என்று இந்த அறிக்கைக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது இயல்பான உயிரிச் சுழற்சிகளை சீர்குலைக்கின்ற, உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற அதிகரித்து வரும் பொது சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துகிறது.
அடிக்கடி நிகழும் ஒலி மாசுபாடு, தீவிர காட்டுத் தீ மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.