TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகத்தின் உலக மதிப்பீட்டு அறிக்கை

May 1 , 2022 1192 days 471 0
  • ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகம் ஒரு உலக மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டில், இந்த உலகம் ஆண்டுக்கு சுமார் 560 பேரழிவுகளை எதிர்கொள்ளும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • கடந்த 20 ஆண்டுகளில், பூமி ஆண்டுதோறும் 350 முதல் 500 நடுத்தரம் முதல் பெரிய அளவிலான பேரழிவுகளை சந்தித்து வருகிறது.
  • இது கடந்த 30 ஆண்டுகளில் பதிவாகியதை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
  • பேரழிவுகள் அடிக்கடி ஏற்படுவது அதிகரித்துள்ளதற்கு போதுமான பேரிடர் மேலாண்மை இல்லாமை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை காரணமாக இருக்கலாம்.
  • மோசமான பேரிடர் மேலாண்மை அமைப்புகளும் நிர்வாகமும் அனைத்துச் சமூக-பொருளாதார ஆதாயங்களையும் ஆபத்தில் ஆழ்த்துகின்ற ஒரு உண்மையான உலக ஆபத்து நிலையைக் குறைத்து மதிப்பிடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்