மேம்பாட்டுச் செயல்முறையில் பொதுச் சேவையின் பங்கினைக் குறிப்பிட்டுக் காட்டவும் சமூகத்தினருக்கு பொதுச் சேவையின் மதிப்பை உணர்த்துவதற்காகவும் வேண்டி இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக “வருங்கால பொதுச் சேவையை புதுமைப்படுத்துதல் : நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்கான ஒரு புதிய சகாப்தத்திற்கான புதிய அரசு மாதிரிகள்” எனும் ஒரு காணொலி நிகழ்வானது நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வினை ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தது.