ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தில் (ECOSOC) இந்தியாவின் உறுப்பினர் அந்தஸ்து
September 19 , 2020 1882 days 724 0
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை ECOSOC நிறுவனத்தின் (Economic and Social Council) அமைப்பான பெண்கள் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
இந்த 2 நாடுகளும் 2021 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்திற்கு, அதாவது 4 ஆண்டுகளுக்கு இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும்.
ECOSOC
ECOSOC ஆனது சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் ஆகிய நீடித்த வளர்ச்சியின் 3 பரிமாணங்களை மேம்படுத்துவதற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கிய அமைப்பாக விளங்குகின்றது.
இது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப் பட்ட இலக்குகளை அடைவதற்காக விவாதம் மற்றும் புத்தாக்கச் சிந்தனையை வலுப்படுத்துதல், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒருமித்த கருத்தை உருவாக்குதல், ஒத்துழைப்பு முயற்சிகள் ஆகியவற்றிற்கான ஒரு மையத் தளமாக விளங்குகின்றது.