ஐக்கிய நாடுகள் உச்சி மாநாட்டில் இந்தியாவின் தூய ஆற்றலுக்கான உறுதிப்பாடுகள்
September 28 , 2021 1327 days 538 0
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்தை 450 GW வரை அதிகரிப்பதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது.
தேசிய ஹைட்ரஜன் ஆற்றல் திட்டத்தினை உருவாக்கி அமல்படுத்தவும் இந்தியா உறுதி பூண்டுள்ளது.
இது 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வருடாந்திரப் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை 1 மெட்ரிக் டன்னாக அதிகரிப்பதற்கானதாகும்.
2025 ஆம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மின்னழுத்தக் கலன் உற்பத்தித் திறனில் 10 GW அளவினை மேலும் சேர்ப்பதற்கு உதவுகின்ற வகையிலான உற்பத்தியுடன் இணைக்கப் பட்ட ஊக்கத் திட்டத்தினையும் தொடங்குவதாக அரசு அறிவித்தது.
2024 ஆம் ஆண்டுக்குள் 15 MMT அளவிலான அழுத்தப்பட்ட உயிரி வாயு உற்பத்தித் திறனை நிறுவ உள்ளதாகவும் இந்தியா அறிவித்தது.
2025-26 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பினை எட்டுவதாகவும் இந்தியா அறிவித்தது.