ஐக்கிய நாடுகள் உலகப் புவிசார் தகவல் மாநாடு
September 8 , 2021
1354 days
864
- 2வது ஐக்கிய நாடுகள் உலகப் புவிசார் தகவல் மாநாடானது 2022 ஆம் ஆண்டில் தெலங்கானாவின் ஹைதராபாத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த நிகழ்வானது இந்தியாவின் வளர்ந்துவரும் புவிசார் சுற்றுச்சூழல் அமைப்பினைப் பற்றிய பார்வையை உலகிற்கு வழங்குகிறது.
- இது உலக புவிசார் தகவல் மேலாண்மை மீதான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
- இது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
- முதலாவது மாநாடானது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீனாவில் நடத்தப் பட்டது.
- 2வது மாநாட்டின் கருத்துரு, ‘Geo enabiling the global village’ என்பதாகும்.

Post Views:
864