ஐக்கிய நாடுகள் சபையின் உலக சாலைப் பாதுகாப்பு வாரம் - மே 15 முதல் 21 வரை
May 19 , 2023 795 days 255 0
ஒரு குறிப்பிட்ட சாலைப் பாதுகாப்புச் சவாலில் கவனம் செலுத்துவதற்காகவும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய சாலைப் பாதுகாப்பு வாரங்கள் நடத்தப்படுகின்றன.
2021-2030 ஆகிய ஆண்டுகளுக்கான சாலைப் பாதுகாப்பு மீதான ஒரு பத்தாண்டு நடவடிக்கை குறித்த உலகளாவியத் திட்டத்திற்கான ஆதரவினை வழங்குவதில் இவை முக்கியப் பங்காற்றுகின்றன.
இந்த வழிகாட்டும் கட்டமைப்பானது 2030 ஆம் ஆண்டிற்குள் சாலைப் போக்குவரத்து மூலம் ஏற்படும் இறப்புகள் மற்றும் காயங்களை 50% வரையில் குறைக்கச் செய்திட செய்வதற்கான ஒரு இலட்சிய இலக்கினைப் பிரதிபலிக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் உலக சாலைகளில் ஏற்படும் சாலை விபத்துக்கள் 1.3 மில்லியன் இறப்புகளுக்கும் 50 மில்லியன் காயங்களுக்கும் வழி வகுத்தன.