ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இயற்கைப் பேரிடர் குறைப்பு தினம் - அக்டோபர் 13
October 16 , 2023 652 days 275 0
பேரிடர்கள், உயிரினங்கள் மீதான அவற்றின் தாக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது, உலகம் முழுவதும் இடர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பேரழிவு குறைப்பு கலாச்சாரத்தை மேம்படுத்தச் செய்வதற்காக 1989 ஆம் ஆண்டில் இந்த நாளினை நிறுவியது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "ஒரு நெகிழ்திறன் மிக்க நல்ல எதிர்காலத்திற்காக சமத்துவமின்மையை எதிர்கொள்ளுதல்" என்பதாகும்.
2015 ஆம் ஆண்டில் ஜப்பானின் சென்டாய் நகரில் பேரிடர் அபாயத்தைக் குறைக்கச் செய்வதற்கான மூன்றாவது ஐக்கிய நாடுகள் சபையின் உலக மாநாடு நடைபெற்றது.