TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மாநாடு 2022

July 1 , 2022 1113 days 717 0
  • 2022 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மாநாடு போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் தொடங்கியது.
  • இது போர்ச்சுகல் மற்றும் கென்யாவுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
  • இந்த மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொள்கிறார்.
  • இது 14வது நிலையான மேம்பாட்டு இலக்கான 'கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்கள்' பற்றி விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • 14வது நிலையான மேம்பாட்டு இலக்கினைச் செயல்படுத்துவதற்காக வேண்டி,  அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலான பெருங்கடல் என்ற ஒரு நடவடிக்கையை உருவாக்குதல்  : பங்காற்றுதல், கூட்டாண்மை மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் இந்தியா சார்பாக இந்த மாநாட்டில் உரையாற்றப்பட உள்ளது.
  • 2021 முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான நிலையான வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் கடல்சார் அறிவியல் பத்தாண்டுகள் என்ற ஒரு முன்னேற்றப் பாதையில் இந்தியா தற்போது உள்ளது.
  • மாநாட்டின் முடிவில், தலைவர்கள் நமது கடல், நமது எதிர்காலம்: நடவடிக்கைக்கான அழைப்பினை விடுத்தல் என்ற தலைப்பிலான அறிக்கையை மீண்டும் வலியுறுத்துவர்.
  • அமெரிக்காவின் ஒரு பிரபல நடிகரும் கடல்சார் ஆர்வலருமான ஜேசன் மோமோவா, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்கள் என்ற இலக்கின் ஆதரவாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்