1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் தினம் அனுசரிக்கப் படுகிறது.
1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபை சாசனம் நடைமுறைக்கு வந்த போது ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டது.
2025 ஆம் ஆண்டானது ஐக்கிய நாடுகள் சபையின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Building Our Future Together" என்பதாகும்.