ஐக்கிய நாடுகள் தினம் – அக்டோபர் 24
October 26 , 2021
1306 days
456
- இந்த ஆண்டானது இந்த அரசுகளுக்கிடையேயான அமைப்பின் 76வது ஸ்தாபன ஆண்டினைக் குறிக்கிறது.
- இந்த தினமானது 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சாசனம் நடைமுறைக்கு வந்த தினத்தைக் குறிக்கிறது.
- இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் தினக் கொண்டாட்டமானது, “அமைதி மற்றும் செழுமைக்காக மீண்டும் ஒன்றிணைதல்” என்ற கருத்துருவுடன் நடைபெற்றது.
- இதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான தென் கொரியக் குடியரசின் நிரந்தரப் பணி அமைப்பானது ஆதரவு வழங்கியது.
- ‘ஐக்கிய நாடுகள்’ என்ற சொற்கூறானது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் அவர்களால் உருவாக்கப்பட்டது.
- தற்போது இந்த அமைப்பில் 193 உறுப்பினர் நாடுகள் உள்ளன.
- 1953 ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேருவின் சகோதரியான விஜய லக்ஷ்மி பண்டிட் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்றார்.

Post Views:
456