ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஆகஸ்ட் மாத தலைமை – இந்தியா
August 3 , 2021 1473 days 555 0
ஆகஸ்ட் மாதத்திற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தலைமைப் பொறுப்பினை இந்தியா ஏற்றுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான போர், கடல்சார் பாதுகாப்பு மற்றும் அமைதி காப்பு ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளை இந்தியா ஏற்பாடு செய்ய உள்ளது.
ஐக்கிய நாடுகள் அவைக்கான நிரந்தர இந்தியப் பிரதிநிதி S. திருமூர்த்தி அவர்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஆகஸ்ட் மாத செயல் திட்டங்கள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பினை நடத்த உள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான இந்தியாவின் 2 ஆண்டு கால நிரந்தர உறுப்பினரல்லாத பொறுப்பு துவங்கியது.
இது 2021 – 22 ஆம் ஆண்டில் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினரல்லாத பொறுப்பின் போதான இந்தியாவின் முதலாவது தலைமைப் பொறுப்பாகும்.