ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் முப்பரிமாண மெய்நிகர் அரசு முறை உத்தி
January 24 , 2022 1395 days 628 0
மெய்நிகர் தோற்றத் தொழில்நுட்பத்தின் உதவியுடன், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் கொலம்பியாவுக்கு மெய்நிகர் ரீதியில் களப்பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த மெய்நிகர் பயணத்தில், அமைதிச் செயல்முறை பற்றியும் கொலம்பியாவில் அது எப்படி நிலவுகிறது என்பதைப் பற்றிய நுண்ணறிவுகளையும் அவர்கள் கேட்டு பார்த்து அறிந்தனர்.
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையானது, அதன் பாதுகாப்பு சபையின் அமர்வில் மெய்நிகர் தோற்றத் தொழில்நுட்பத்தை (Virtual Reality technology) முதன்முறையாகப் பயன்படுத்தி உள்ளது.
இந்தப் புதுமையான ஒரு தொழில்நுட்பமானது, மோதல்கள், அமைதி காத்தல் மற்றும் அமைதி நிலையை உருவாக்குதல் போன்றவற்றைச் சிறந்த முறையில் புரிந்து கொள்ள உதவும்.