ஐக்கியப் பேரரசினால் முன்மொழியப்பட்ட கார்பன் எல்லை வரி
May 12 , 2025 17 hrs 0 min 26 0
ஐக்கியப் பேரரசு நாட்டு அரசாங்கமானது, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதன் கார்பன் எல்லை இணக்க முறைமையினை (CBAM) 2027 ஆம் ஆண்டு முதல் செயல் படுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
இரும்பு மற்றும் எஃகு, அலுமினியம், உரம் மற்றும் சிமெண்ட் போன்ற பொருட்களுக்கு 2027 ஆம் ஆண்டு முதல் கார்பன் வரி விதிக்கப்படும்.
இந்த முடிவின் காரணமாக ஐக்கியப் பேரரசிற்கு மேற்கொள்ளப்படும் 775 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படலாம்.
சமீபத்திய இந்தியா-ஐக்கியப் பேரரசு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் பிரிட்டனின் முன்மொழியப்பட்ட கார்பன் வரியை எதிர்ப்பதற்கு எந்தவித விதிமுறையும் இல்லை.
தற்போதைய நிச்சயமற்ற தன்மை மற்றும் நடைமுறையில் இது குறித்த எந்த சட்டமும் இல்லாததால், எதிர்காலத்தில் சலுகைகளுக்கான நடவடிக்கை எடுப்பதற்கு அல்லது மறு சமநிலைப்படுத்தும் ஒரு உரிமையை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும் என்ற புரிதல் உள்ளது.