உலக காற்றுத் தர அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில், தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரமாக புதுதில்லி உள்ளது.
உலக அளவில் புது தில்லி உலகில் 10வது மிகவும் மாசுபட்ட நகரமாக தரவரிசை படுத்தப்பட்டு இருக்கின்றது.
உலகின் மாசுபடுத்தப்பட்ட நகரமாக சீனாவின் ஷின்ஜியாங் நகரம் இருக்கின்றது.
உலக காற்றுத் தர அறிக்கையானது ஐ.க்யூ ஏர் (IQ Air) என்ற அமைப்பில் வெளியிடப் பட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐ.க்யூ ஏர் (IG Air) என்ற அமைப்பு pm2.5 எனப்படும் நுண்மத் துகள்களின் அளவின் அடிப்படையில் காற்றின் தரநிலையை அளவிடுகிறது.
இவ்வறிக்கை உலகளவில் மாசுபட்ட 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை எனக் கூறுகிறது.
நீண்டகாலமாக pm2.5க்கு ஆட்படுவது புற்றுநோய் மற்றும் இருதய நோய்கள் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை ஏற்படுத்தும்.