ஐசோடிரீடினோயின் மீதான CDSCO அமைப்பின் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள்
February 4 , 2019 2372 days 692 0
கடுமையான முகப்பரு குறைபாட்டிற்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் வாய்வழி மருந்தான ஐசோடிரீடினோயின் என்ற மருந்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (The Central Drugs Standard Control Organisation - CDSCO) வழங்கி இருக்கின்றது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் அம்மருந்தின் விற்பனை, உற்பத்தி மற்றும் விநியோகத்தைக் கண்காணித்திட வேண்டுமென்று அந்நிறுவனம் கூறியிருக்கின்றது.
அம்மருந்து முறையான ஆலோசனையின்றி உட்கொள்ளப்படாவிடின் பிந்தைய வம்சாவளியினரில் பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்தும்.
சருமநோய் மருந்துவர்களின் ஆலோசனைப்படி (மருந்துச் சீட்டின்படி) மட்டுமே சில்லறை விற்பனையாளர்களால் அம்மருந்து விற்கப்பட முடியும்.