சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஐதராபாத் பிரிவில் ஏற்பட்ட ஒரு மோசமான வெடிப்பு ஆனது, மைக்ரோகிரிஸ்டலின் செல்லுலோஸ் எனும் நுண் படிகமுடைய (MCC) ஒரு நாரிழைமத்தினை உருவாக்கியது.
MCC என்பது வேதியியல் ரீதியாக செயலற்ற, உடலால் உறிஞ்சப்படாத, மேலும் சருமத்தை எரிச்சலூட்டாத மூலக்கூறு ஆகும்.
இது மருந்துகள், உணவு, அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பிற தொழில் துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பிணைப்பு மற்றும் சீரமைப்பு காரணியாகும்.
MCC ஆனது மருந்துகளில் எடை சேர்க்க உதவுவதோடு, மருந்தின் முக்கியக் கூறுகள் திறம்படச் செயல்பட உதவுகிறது.