ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UN ESCAP) தனது 2026 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட நிலையில்அதில் அதிகரிக்கும் ஆற்றல் மற்றும் உணவுச் செலவுகள் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன.
ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் பணவீக்கம் 2025 ஆம் ஆண்டில் 3.5% ஆக இருந்ததில் இருந்து 2026 ஆம் ஆண்டில் 4.6% ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
வளரும் பொருளாதார நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 4.6%-லிருந்து 4.0% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிசக்தி, எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்எரிவாயு விலை சுமார் 55% மற்றும் யூரியா விலை சுமார் 35% அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2026 ஆம் ஆண்டில் 6.4% ஆகவும், பணவீக்கம் 4.4% ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் செலவுகள் வாங்கும் திறனைக் குறைக்கக் கூடும் என்பதோடு, இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை அதிகம் பாதிக்கும்.