2025-ஆம் ஆண்டில் உலகளாவிய பட்டினி குறைந்துள்ளது, ஆனால் பட்டினியின்மை இலக்கை அடைவதில் உலகம் பின்தங்கியுள்ளது.
2030-ஆம் ஆண்டுக்கான பட்டினியின்மை இலக்கை அடைவதில் உலகம் பின்தங்கி உள்ளது.
2025-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 7.8 சதவீதம் பேர் பட்டினியை எதிர்கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மோதல்கள், தீவிர வானிலை, உதவிக் குறைப்பு மற்றும் சத்தான உணவுகளின் விலை உயர்வு ஆகியவை சமீபத்திய முன்னேற்றங்களைத் தலைகீழாக மாற்றக்கூடும்.
இத்தகையத் தரவுகள் கண்காணிக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக, அதிக எண்ணிக்கையிலான பசியால் வாடும் மக்களைக் கொண்ட பிராந்தியமாக ஆப்பிரிக்கா, ஆசியாவை முந்தியுள்ளது.
தெற்கு சூடான், புருண்டி, சோமாலியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளில் மிகக் கடுமையான பட்டினி நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
ஆப்பிரிக்காவில் உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலைக்கு முக்கியக் காரணம், பால், முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த விலங்குசார் உணவுகளுடன் தொடர்புடையதாக இருந்தது.
'உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் நிலை 2026' என்ற அறிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து சிறப்பு நிறுவனங்களான உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியம் (IFAD), ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF), உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் கூட்டாக வெளியிடப்பட்டது.