ஐ.நா. அமைதி காக்கும் பணிக்கான தூதரகத் திட்டத்தின் முடிவு – சோமாலியா
November 6 , 2026 9 days 99 0
சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த அமைதி காக்கும் பணிகளை நிறைவு செய்ததன் மூலம், ஐக்கிய நாடுகள் சபை (UN) தனது அரசியல் தூதரகத்தை முடித்துக்கொண்டது.
1995 ஆம் ஆண்டில் சோமாலியாவுக்கான ஐக்கிய நாடுகளின் அரசியல் அலுவலகமாக (UNPOS) இப்பணி தொடங்கியது.
ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஆதரிப்பதற்காக 2013 ஆம் ஆண்டில் ஐ.நா பாதுகாப்பு சபையால் சோமாலியாவுக்கான ஐக்கிய நாடுகளின் உதவித் தூதரகம் (UNSOM) நிறுவப்பட்டது.
2024 ஆம் ஆண்டில், UNSOM-ஆனது இரண்டு ஆண்டு மாற்ற காலத்திற்காக சோமாலியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மாற்று உதவித் தூதரகம் (UNTMIS) என மறுபெயரிடப்பட்டது.
இத்தூதரகத்தின் பொறுப்புகள் சோமாலிய நிறுவனங்கள் மற்றும் ஐ.நா. குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் தீவிரவாதக் குழுவின் தொடர்ச்சியான பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.