ஐ.நா. ஆதரவு பெற்ற பருவநிலை ஒருங்கமைவு சரிபார்ப்புப் பட்டியல்
November 13 , 2025 14 days 45 0
உலகளாவிய அறிக்கையிடல் முன்னெடுப்பு ஆனது (GRI) ஐக்கிய நாடுகள் சபை (UN) ஒப்புதல் அளித்த "ஒருங்கமைவு விவகாரங்கள் சரிபார்ப்புப் பட்டியலை" அறிமுகப் படுத்தியது.
இந்த செயற்கருவி ஆனது நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கள் பருவநிலை வெளிப்பாடுகளை நம்பகமான நிகரச் சுழிய இலக்குகள் மற்றும் பரிமாற்றத் திட்டங்களுக்கான ஐ.நா. தரநிலைகளுடன் சீரமைக்க உதவுகிறது.
ஐ.நா. சபையுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இது நிகரச் சுழிய உமிழ்வு சார் உறுதிப்பாடுகள் குறித்த ஐ.நா. உயர்நிலை நிபுணர் குழுவின் (HLEG) பரிந்துரைகளை உருவாக்கி அவற்றை GRI நிலைத்தன்மை அறிக்கையிடல் தரநிலைகளுடன் இணைக்கிறது.
இந்தப் பட்டியல் புதுப்பிக்கப்பட்ட “GRI 102: பருவநிலை மாற்றம் 2025 தரநிலை”யை நிறைவு செய்கிறது.
இது பாரிசு உடன்படிக்கை மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான 2030 ஆம் ஆண்டு செயல்பாட்டு நிரல் நிரலையும் ஆதரிக்கிறது.