TNPSC Thervupettagam

ஐ.நா. இணையவழிக் குற்றத் தடுப்பு ஒப்பந்தம்

September 30 , 2026 12 hrs 0 min 20 0
  • இணையவழிக் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கையெழுத்திட்டார், இதன் மூலம் இணையவழிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளில் இந்தியாவின் பங்கேற்பு வலுப்பெற்றுள்ளது.
  • இணையவழிக் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இணையவழிக் குற்றங்கள் குறித்த முதலாவது விரிவான உலகளாவிய ஒப்பந்தம் இதுவாகும்.
  • இந்த மாநாடு எல்லை தாண்டிய விசாரணைகள், மின்னணு சான்றுகளைப் பகிர்தல் மற்றும் இணையவழிக் குற்றங்கள் மீதான வழக்குத் தொடுத்தல் ஆகியவற்றை ஆதரிக்கிறது.
  • தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்கள் (ICTs) சம்பந்தப்பட்ட குற்றங்களை விசாரிக்க இது நாடுகளுக்கு உதவுகிறது.
  • எல்லை தாண்டிய இணையவழிக் குற்றங்களால் உருவாக்கப்படும் தொழில்நுட்ப மற்றும் சட்டப்பூ ர்வமான சவால்களுக்கு இது தீர்வு காண்கிறது.
  • இணையவழிக் குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவியல் வருவாயை மீட்டெடுப்பதற்கும் இது துணைபுரிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்