TNPSC Thervupettagam

ஐ.நா சாசனத்தில் உள்ள 'எதிரி அரசு' பிரிவுகள்

September 28 , 2026 3 days 56 0
  • 81-ஆவது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் (UNGA) போது, ஐக்கிய நாடுகளின் (UN) சாசனத்திலிருந்து "எதிரி அரசு" (enemy State) பிரிவுகளை நீக்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் சானே தாகைச்சி அழைப்பு விடுத்தார்.
  • "எதிரி அரசு" என்ற சொல் இரண்டாம் உலகப் போரின்போது ஐ.நா சாசனத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் எதிரிகளாக இருந்த நாடுகளை, முக்கியமாக ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை குறிக்கிறது,.
  • 53, 107 மற்றும் 77 ஆகிய சரத்துகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட எதிரி நாடுகள் தொடர்பான விதிகளைக் கொண்டுள்ளன.
  • 1995 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) இந்தப் பிரிவுகளை வழக்கொழிந்ததாக அங்கீகரித்தது என்ற நிலையில் ஆனால் அவை ஐ.நா சாசனத்தின் ஒரு பகுதியாகவே உள்ளன.
  • சரத்து 108 இன் கீழ், அவற்றை நீக்குவதற்கு பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் பாதுகாப்பு சபையின் அனைத்து ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உட்பட ஐ.நா உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் ஒப்புதல் தேவை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்