TNPSC Thervupettagam

ஐ.நா தலைமையகத்தில் காந்தி சூரிய ஒளிப் பூங்கா

September 26 , 2019 2126 days 728 0
  • பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்கப் பயணத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட 50 கிலோவாட் திறனுள்ள “காந்தி சூரிய ஒளிப் பூங்காவைத்” திறந்து வைத்தார்.
  • பிரதமர் மோடியுடன் வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் தென் கொரியாவின் தலைவர் மூன்-ஜே-இன் ஆகியோர் இணைந்து மகாத்மா காந்தியின் ஐக்கிய நாடுகள் அஞ்சல் தலையை வெளியிட்டனர்.
  • மேலும் லாங் தீவில் உள்ள நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழக வளாகத்தில் காந்தி அமைதித் தோட்டத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு 150 மரக் கன்றுகளும் நடப்பட்டுள்ளன.
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

மோடி நலமா!
  • டெக்சாஸின் ஹூஸ்டனில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே உரையாற்றும் ஒரு மிகப் பெரிய “மோடி நலமா!” என்ற நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் மோடி பங்கேற்றுள்ளார்.
  • இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொண்டார்.
  • பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பால் மோடிக்கு உலகளாவிய கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது.
  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்