ஐநா பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தரமல்லாத உறுப்பினர்கள்
June 10 , 2018 2625 days 850 0
ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் (United Nations Security Council) ஐந்து புதிய நிரந்தரமல்லா உறுப்பினர்களை (Non-Permanent) ஐநா பொது அவை (United Nations General Assembly) தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தப் புதிய உறுப்பினர்களின் பதவிக் காலம் இரண்டாண்டுகளாகும்.
ஐ.நா-வின் ஒட்டுமொத்த அமைதி மற்றும் பாதுகாப்புச் செயற்பாட்டு நிரல்களை (UN’s whole peace and security agenda) நிர்ணயிக்கின்ற அமைப்பே ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலாகும்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 நாடுகளாவன:
ஜெர்மனி, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், டொமினிகன் குடியரசு
பொலிவியா, எத்தியோப்பியா, கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவீடன் ஆகிய வெளியேறுகின்ற ஐந்து நாடுகளால் உண்டாகும் காலியிடத்தை இந்நாடுகள் பூர்த்தி செய்ய உள்ளன.
மொத்தம் 10 நிரந்தரமல்லா உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராகத் தொடர்கின்ற மீத ஐந்து நாடுகளாவன ஐவரி கோஸ்ட், 2. நிலநடுக்கோட்டு கினியா, 3. குவைத், 4. பெரு, 5. போலந்து.
இப்புதிய 5 புதிய நிரந்தமல்லா உறுப்பு நாடுகளுள் முதல் முறையாக டொமினிகன் குடியரசு பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ளது. பிற நான்கு நாடுகள் ஏற்கனவே பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ளன.