2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஐ.நா. பெண்கள் அமைப்பானது 2025 ஆம் ஆண்டில் அதன் 15வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது, இது உலகளவில் பாலின சமத்துவத்தில் முன்னேற்றம் மற்றும் தொடர்ச்சியான சில சவால்களை எடுத்துக் காட்டுகிறது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதக் கணக்கெடுப்பு பாலினச் சமத்துவத்தில் மெதுவான முன்னேற்றம் குறித்த கவலைகள் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது.
150க்கும் மேற்பட்ட அரசாங்க அறிக்கைகளின் தரவுகள், நான்கில் ஒரு நாடு பெண்களின் உரிமைகளுக்கு எதிரான எதிர்வினையை எதிர்கொள்வதைக் காட்டுகின்றன.
600 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் , தங்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பணயம் வைக்கும் வகையில், தற்போது மோதல் மண்டலங்களுக்கு அருகில் வாழ்கின்றனர்.
One Win Leads to Another (OWLA) திட்டம் ஆனது, விளையாட்டில் முன்னணித்துவம் முன்னெடுப்புகள் மூலம் பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவில் 3,200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தது.