எதிர்காலத்திற்கான ஒப்பந்தம் மற்றும் அதன் முக்கிய இணைப்புகளான உலகளாவிய எண்ணிம உடன்படிக்கை மற்றும் எதிர்காலத் தலைமுறைகள் குறித்த பிரகடனத்திற்கு இந்தியா தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தினை மறுபரிசீலனை செய்வதற்கான மூன்றாவது முறைசாரா பேச்சு வார்த்தையின் போது இது மேற்கொள்ளப்பட்டது.
இந்த முறைசாரா பேச்சுவார்த்தையானது, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடுகளுக்கு 2028 ஆம் ஆண்டு ஒப்பந்த மறு ஆய்வுக்கு முன்னதாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தளத்தை வழங்கியது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற எதிர்காலத்திற்கான உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள் எதிர்காலத்திற்கான ஒப்பந்தத்தையும் அதன் இணைப்புகளையும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தமானது அதன் இணைப்புகளான உலகளாவிய எண்ணிம உடன்படிக்கை மற்றும் எதிர்காலத் தலைமுறைகள் குறித்த ஒரு பிரகடனம் ஆகியவற்றுடன் 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.