TNPSC Thervupettagam

ஐ.நா.வின் உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் அறிக்கை 2026

January 13 , 2026 13 days 92 0
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையால் (UN DESA) தயாரிக்கப்பட்டது.
  • இது ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) மற்றும் ஐக்கிய நாடுகளின் ஐந்து பிராந்திய ஆணையங்களின் கூட்டாண்மையுடன் தயாரிக்கப் பட்டது.
  • ஐ.நா. அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய இராணுவச் செலவினம் 2.7 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்பதோடு இது "குறைந்தபட்சம் 1988ம் ஆண்டிலிருந்து காணப்படாத மிகக் கடுமையான வருடாந்திர அதிகரிப்பு" ஆகும்.
  • இந்த அதிகரிப்பிற்கு, மொத்தச் செலவில் கிட்டத்தட்ட 75 சதவீதத்தைக் கொண்டுள்ள உலகின் முதல் 10 பெரிய செலவின நாடுகளே காரணமாகும்.
  • பல வளரும் நாடுகள் அதிக கடன் சுமைகள், குறைந்த நிதிச் சுதந்திரம் மற்றும் மந்தமான வளர்ச்சி ஆகியவற்றால் தொடர்ந்து போராடி வருகின்றன.
  • நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய முன்னேற்றம் இன்னும் வெகு தொலைவிலேயே உள்ளது.
  • கூட்டாண்மையைப் புதுப்பிக்கவும், கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் 2025 ஆம் ஆண்டில் சர்வதேச சமூகத்தால் சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன.
  • இந்தக் கூட்டு நடவடிக்கைகளில் செவில்லா உறுதிப்பாடு (Sevilla Commitment), உலக சமூக உச்சி மாநாடு மற்றும் COP30 ஆகியவை அடங்கும்.
  • வேலைவாய்ப்புகள், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளே அமைதி மற்றும் செழிப்பின் அடித்தளம் என்பதை உலக சமூக உச்சி மாநாடு மீண்டும் உறுதிப் படுத்தியது.
  • மேம்பாட்டிற்கான நிதியுதவி குறித்த 4வது சர்வதேச மாநாடு (FfD4) 2025 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் ஸ்பெயினின் செவில்லாவில் நடைபெற்றது.
  • வளரும் நாடுகளில் உள்ள 4 டிரில்லியன் டாலர் வருடாந்திர நிலையான வளர்ச்சி இலக்கு நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கான ஒரு பாதையை வகுத்த செவில்லா உறுதிப்பாட்டை ஏற்றுக் கொண்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்