ஐ.நா.வின் உலகளாவிய சாலைப் பாதுகாப்பு வாரம் (மே 17 – 23)
May 19 , 2021 1542 days 712 0
ஐ.நா.வின் 6வது உலகளாவிய சாலைப் பாதுகாப்பு வாரமானது உலகம் முழுவதுமுள்ள நகரங்கள், சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களில் 30 கி.மீ/மணி எனும் ஒரு வேக வரம்பானது விதிக்கப் படவேண்டுமென்பதை அறிவிக்கிறது.
ஐ.நாவின் உலகளாவிய சாலைப் பாதுகாப்பு வாரமானது உலக சுகாதார அமைப்பினால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யப்படும் ஒரு உலகளாவிய சாலைப் பாதுகாப்புப் பிரச்சாரமாகும்.
இந்த ஆண்டிற்கான கருத்துரு, “Streets for Life” (வாழ்க்கைக்காகவே சாலைகள்) என்பது ஆகும்.
இந்த ஆண்டின் சாலைப் பாதுகாப்பு வாரத்திற்கான முழக்கம் #Love30 என்பதாகும்.
இந்தச் சாலைப் பாதுகாப்பு வாரமானது சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதோடு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான சில மாற்றங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.