ஐ.நா.வின் புலம்பெயர்ந்த உயிரினங்களின் 13வது COP (பங்காளர்கள் மாநாடு)
February 13 , 2020 1968 days 702 0
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை புலம்பெயர்ந்த வன விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் (Conservation of Migratory Species of Wild Animals - CMS) 13வது பங்காளர்கள் மாநாடானது (Conference of Parties - COP) இந்தியாவால் குஜராத்தில் உள்ள காந்திநகரில் நடத்தப்பட இருக்கின்றது.
இந்த மாநாடானது இந்தியாவின் சார்பாக மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகத்தினால் நடத்தப்பட இருக்கின்றது.
இந்தியாவில் நடத்தப்பட இருக்கும் CMS - COP13ன் கருப்பொருள், “புலம்பெயர்ந்த இனங்கள் புவியில் உள்ள பகுதிகளை இணைக்கின்றன மற்றும் நாங்கள் அவற்றை வரவேற்கின்றோம்” என்பதாகும்.
CMS - COP13க்கான சின்னம் “கிபி - கானமயில்” என்பதாகும்.
கான மயிலானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature - IUCN) சிவப்பு பட்டியலில் “மிகவும் அச்சுறு நிலையில்” உள்ள இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
BONN ஒப்பந்தம் - இந்தியா
புலம்பெயர்ந்த வன விலங்குகளின் பாதுகாப்பு ஆனது BONN ஒப்பந்தம் என்றும் அழைக்கப் படுகின்றது.
இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் உள்ள ஒரு சுற்றுச்சூழல் சார்ந்த ஒப்பந்தமாகும்.
இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கும் இந்தியாவானது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றது.
1983 ஆம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்த வன விலங்குகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா உறுப்பு நாடாக இருந்து வருகின்றது.
புலம்பெயர்ந்த கடல் உயிரினங்களைப் பாதுகாக்க இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
பாதுகாப்பு மற்றும் மீட்பு செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்காகக் கடல் பசு, திமிங்கல சுறா, கடல் ஆமை (இரண்டு இனங்கள்) உள்ளிட்ட ஏழு இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.