TNPSC Thervupettagam

ஐந்தாண்டு அரிசி விநியோக ​​ஒப்பந்தம்

March 4 , 2026 11 days 68 0
  • உலகளாவிய பசி நிவாரணத்திற்காக நிலையான அரிசி விநியோகங்களை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இந்தியா ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • அவசரகால உணவு உதவிக்காக இந்திய உணவுக் கழகம் (FCI), ஐந்து ஆண்டுகளில் 200,000 மெட்ரிக் டன் அரிசியை வழங்கும் என்ற நிலையில் இதில் 25% வரை குருணை தானியங்களும் அடங்கும்.
  • தற்போதைய விநியோகச் சுழற்சிக்கான விலை மார்ச் 31, 2026 வரை குவிண்டாலுக்கு ரூ.2,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் பரஸ்பர ஆலோசனை மூலம் வருடாந்திர மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
  • ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் மோதல் ஏற்பட்டுள்ள மண்டலங்களில் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தானியங்கள் கணிக்கக் கூடிய மற்றும் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதை இந்த ஒப்பந்தம் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்