5G மேம்பட்ட நடுத்தர தூரத் தாக்குதல் வரம்புடைய போர் விமானம்
August 26 , 2025 81 days 112 0
இந்தியா தனது ஐந்தாம் தலைமுறை நுட்பத்திலான மேம்பட்ட நடுத்தர தூரத் தாக்குதல் வரம்புடைய போர் விமானத்திற்கான (AMCA) இயந்திரங்களை இணைந்து உருவாக்கி உற்பத்தி செய்ய சாஃப்ரான் எனும் பிரெஞ்சு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.
சாஃப்ரான் நிறுவனமானது, AMCA விமானத்தின் இரட்டை இயந்திர உள்ளமைவுக்காக ஆஃப்டர்பர்னர் எனும் உபரி எரிபொருள் எரிப்பு எந்திரத்துடன் 120 கிலோநியூட்டன்கள் (kN) வரையிலான உந்துதலை வழங்குவதற்காக அதன் M88 இயந்திரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தன்னிறைவுக்கான உந்துதலுடன் ஒன்றும் வகையில், AMCA விமானத்தின் முதல் விமான இயக்கமானது, 2028 ஆம் ஆண்டினை இலக்காகக் கொண்டு, 2026–27 ஆம் ஆண்டிற்குள் அதன் முன்மாதிரிகள் உருவாக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் திறனை வலுப்படுத்துவதற்காக வேண்டி இந்தியாவில் எரிவாயு விசையாழி தொழில்நுட்பத்திற்கான ஒரு சிறப்பு மையத்தை அமைக்கவும் சாஃப்ரான் திட்டமிட்டுள்ளது.