ஐந்தாவது தமிழ்நாடு காவல் ஆணையம் - சிறைச்சாலை மரணங்கள்
July 10 , 2025 2 days 82 0
ஐந்தாவது தமிழ்நாடு காவல் ஆணையமானது, காவல்துறையினரின் கடும் அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் சந்தேகத்திற்குறிய நபர்களை மிருகத்தனமாக நடத்துவதற்கு எதிராக கடுமையான ஒழுங்கு முறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.
வாய்மொழி வாயிலான துஷ்பிரயோகம், தவறான வகையில் தடுப்புக் காவலில் வைத்திருத்தல், போலி வழக்குப் பதிவு, பாரபட்சமான விசாரணைகள் மற்றும் சில குறிப்பிட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் வழக்குகளில் உடனடி உள் விசாரணை மற்றும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டி அந்த ஆணையம் வலியுறுத்தியது.
தேவையற்ற கைதுகளைக் குறைப்பதற்கு அர்னேஷ் குமார் மற்றும் பீகார் மாநிலம் ஆகியோருக்கு இடையிலான வழக்கில் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் முக்கிய வழிகாட்டுதல்களை கடுமையாக செயல்படுத்த ஆணையம் பரிந்துரைத்தது.
காவல் நிலையங்களில் பெண்கள், குழந்தைகள், மருத்துவ ரீதியாகத் தகுதியற்ற நபர்கள் மற்றும் மது அருந்திய நபர்களை தடுப்புக் காவலில் வைப்பது கட்டாயமாக கண்டிக்கப் படுகிறது.
கைது செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் கட்டாய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது பரிந்துரைக்கப்படுவதோடு மருத்துவ சோதனையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அதன் பிறகான நடவடிக்கையினை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
காவலில் உள்ள எந்தவொரு நபரையும் பாதுகாப்பதற்காக வேண்டி போதுமான காவல் துறையினர் பணி நேரத்தில் இருக்க வேண்டும்.