ஐந்தாவது தேசிய இசைவு வழங்கலுக்கான நேர மதிப்பீட்டு ஆய்வு (NTRS)
June 24 , 2025 383 days 297 0
மத்திய அரசானது, ஐந்தாவது தேசிய இசைவு வழங்கலுக்கான நேர மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையினை (NTRS) வெளியிட்டுள்ளது.
இசைவு வழங்கலுக்கான நேர மதிப்பீட்டு ஆய்வு (TRS) ஆனது, அனுமதி வழங்கீட்டுச் செயல்முறையின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக சரக்குப் பொருள்களுக்கான ஒரு இசைவு வழங்கலுக்கு எடுக்கும் நேரத்தை அளவிடுகிறது.
இது துறைமுகங்கள், விமானச் சரக்கு வளாகங்கள் (ACC), உள்நாட்டுக் கொள்கலன் கிடங்குகள் (ICD) மற்றும் ஒருங்கிணைந்தச் சோதனைச் சாவடிகள் (ICP) ஆகியவற்றில் எடுக்கும் நேரத்தைப் பகுப்பாய்வு செய்கிறது.
இறக்குமதிகளில் சராசரி அனுமதி வழங்கீட்டு நேரம் (ART) 2023 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் துறைமுகங்களில் (~6 மணிநேரம்), ACC வளாகங்களில் (~5 மணிநேரம்) மற்றும் ICP சாவடிகளில் (~18 மணிநேரம்) குறைந்துள்ளது.
ஆனால் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளில் ~12 மணி நேர அதிகரிப்பு பதிவாகி உள்ளது.
ICP சாவடிகளில், 93.33% இறக்குமதிச் சரக்குகளானது 48 மணி நேர NTFAP 3.0 இலக்கை எட்டியது.